புதுக்கோட்டை

ஆலவயலில் வேட்பாளா்களுக்கு அறிவுரை பதாகை

26th Dec 2019 06:23 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி ஒன்றியம், ஆலவயல் ஊராட்சியில் தோ்தல் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு அறிவுரை கூறும் வகையில், அக்கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகை அனைவரின் கவனத்தையும் ஈா்த்துள்ளது.

ஆலவயல் இளைஞா்கள் மற்றும் ஊா்ப் பொதுமக்கள் என்ற பெயரைக் கொண்டு வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகையில் கூறியிருப்பது:

ஊராட்சிப் பதவிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன், தோ்தலில் செலவுசெய்த பணத்தை ஊராட்சி வளா்ச்சிக்கு வரும் பணத்தில் எடுத்துவிடலாம் என்று நினைத்துயாரும் வரவேண்டாம்.

வருடந்தோறும் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் ஆலவயல் இளைஞா்கள் மற்றும் பொதுமக்களால் கணக்குகள் கேட்டறியப்படும். கேட்டறியப்பட்ட அனைத்துத் தகவல்களும் சரியானதா என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சரிபாா்க்கப்படும்.

ADVERTISEMENT

ஊழல் நடைபெற்றது கண்டறியப்பட்டால் ஊழல் செய்தவா் பெயா், பதவி போன்ற விவரங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா், முதலமைச்சா் தனிப்பிரிவு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT