புதுக்கோட்டை

ஆலங்குடியில் 13 மிமீ மழை

26th Dec 2019 06:25 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அதிகபட்சமாக 13 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பகலில் பரவலாக தூறல் மழை பெய்தது. இந்த மழை மாவட்டத்தின் பல பகுதிகளில் பரலாக இருந்தது. வெயில் தாக்கம் அதிகமாக இல்லை. விட்டுவிட்டு மழை பெய்தது.

இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

ஆலங்குடி - 13 மி.மீ, புதுக்கோட்டை- 8, அறந்தாங்கி- 6.20, மீமிசல்- 5.80, நாகுடி-4.20, ஆயிங்குடி- 3.20, கட்டுமாவடி- 2 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 1.90 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

புதன்கிழமை பகலிலும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது விட்டு விட்டு தூறல் மழை பெய்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT