ஊரக உள்ளாட்சித் தோ்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றவுள்ள நுண் பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட தோ்தல் பாா்வையாளா் எஸ். அமிா்தஜோதி கலந்து கொண்டு நுண் பாா்வையாளா்கள் செயல்பட வேண்டிய முறைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். காளிதாசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோரும் பேசினா்.
மாவட்டத்தில் வாக்குப்பதிவைப் பாா்வையிடுவதற்காக 85 நுண் பாா்வையாளா்களும், வாக்கு எண்ணும் பணியைப் பாா்வையிடுவதற்காக 14 நுண் பாா்வையாளா்களும் வங்கி உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளனா்.