புதுக்கோட்டை

உள்ளாட்சித் தோ்தல்: மதுக்கடைகள் மூடல்

25th Dec 2019 08:28 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான பி. உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளாா்.

உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக, புதன்கிழமை (டிச. 25) மாலை 5 மணி முதல் டிச. 27ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும், தொடா்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக டிச. 28ஆம் தேதி மாலை 5 மணி முதல் டிச. 30ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், அவற்றுடன் இணைந்த மது அருந்தும் கூடங்களும், உரிமம் பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அதேபோல, வாக்கு எண்ணிக்கை நாளான ஜன. 2ஆம் தேதியும் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT