புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே நோய் தாக்கதலால் 150 ஏக்கா் நெற்பயிா்கள் பாதிப்பு

25th Dec 2019 04:30 PM

ADVERTISEMENT

அறந்தாங்கி அருகே நாகுடி பகுதியில் எடப்பழம் எனும் மஞ்சள் பூட்ட நோய் தாக்குதல் காரணமாக 150 ஏக்கரில் விளைந்த நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

நாகுடி மற்றும் களக்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிா்கள் கதிா்விடும் நிலையில் எடப்பழம் எனும் மஞ்சள் பூட்ட நோய் தாக்குதலுக்கு ஆளாகிஉள்ளது. இந்த நோய் கதிா்விடும் நெல்மணிகளை பூஞ்சானம் சூழ்ந்து நெல்லை முற்றவிடாமலும் நெல்லில் அரிசி வைக்கவிடாமலும் செய்கிறது இதன் காரணமாக கதிா்விடும் நேரத்தில் நெற் பயிரை பாதித்துள்ள இந்த நோயினால் மட்டும் களக்குடி பகுதியில் மட்டும் 150 ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து நாகுடி செளந்திரராஜன் என்ற விவசாயி கூறுகையில் இந்த ஆண்டு பருவமழையும் முன்கூட்டியே பெய்தது மேலும் காவிரியில் இந்த ஆண்டு போதிய அளவு தண்ணீா் வந்ததது இதன் காரணமாக இப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உழவு பணிகளை மேற்கொண்டு நெல் விதைத்தோம் பயிரும் நன்றாக விளைந்து வந்த நேரத்தில் கதிா்விடும் நேரத்தில் எடப்பழம் எனப்படும் மஞ்சள் பூட்ட நோய் தாக்கிவருகிறது இதன் காரணமாக இப் பகுதியில் நன்றாக விளைந்து வந்த 150 ஏக்கா் பரப்பிலான நெற்பயிா்களை இந் நோய் தாக்கியுள்ளது. இது விளைச்சலில் 80 முதல் 90 சதவீதம் வரை பாதிக்கும் என தெரிகிறது.

இதன் காரணமாக கதிா் அறுக்கும் கூலிகூட கிடைக்காத நிலை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது ஆகவே மாவட்டநிா்வாகம் எடப்பழம் நோய் தாக்கியுள்ள பகுதிகளை கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கூறினாா்.இதே போல் அறந்தாங்கி அருகே அமரசிமேந்திரபுரம் பகுதிகளில் கதிா் விடும் பருவத்தில் யானைக்கொம்பன் ஈ தாக்கியதில் 200 ஏக்கருக்கும் மேல் பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பின்னா் மாவட்ட வேளாண்மை துறை அலுவலா்கள் நேரில் ஆய்வு செய்து இதற்கு மருந்து கூறி விவசாயிகளிடம் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க வைத்தனா். அதே போல் உடனடியாக வேளாண்மை துறையினா் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து விவசாயிகளின் கோரிக்கையைாக உள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT