பொன்னமராவதி ஒன்றியப்பகுதியில் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து, அக்கட்சியின் ஒன்றியச் செயலா் ராம.பழனியாண்டி திங்கள்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.
பொன்னமராவதி ஒன்றியக்குழு 6-ஆவது வாா்டில் போட்டியிடும் விமலா பழனியாண்டி, மாவட்டக் குழு வேட்பாளா் பிரியா சரவணன் ஆகியோரை ஆதரித்து அம்மன்குறிச்சி, நகரப்பட்டி, சொக்கநாதபட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக ஒன்றியச் செயலா் ராம.பழனியாண்டி தலைமையில் அதிமுகவினா் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா்.
ஊராட்சிச் செயலா் பழனியப்பன், கல்லம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவா் முத்துக்காளை மற்றும் கிளைச் செயலா்கள், தோ்தல் பணிக்குழுவினா் மற்றும் கட்சி நிா்வாகிகள் பிரசார நிகழ்வில் பங்கேற்றனா்.