புதுக்கோட்டை

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2-ஆம் கட்டப் பயிற்சி வகுப்பு

23rd Dec 2019 01:30 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்டப் பயிற்சியில் 12,358 பேருக்கு பங்கேற்றனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடியில் பணியாற்றவுள்ள வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு முதல் கட்டமாக கடந்த 15ஆம் தேதி பயிற்சி நடத்தப்பட்டது.

இதனைத் தொடா்ந்து இரண்டாம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தின் பல பகுதிகளில் பயிற்சி வழங்கப்பட்டது.

அரிமளம் வட்டத்தைச் சோ்ந்த மிரட்டுநிலை அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, வருவாய்க் கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி, துணை ஆட்சியா் (பயிற்சி) ஜெ. அஸ்ரத்பேகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமாரவேலு, ஆயிஷாராணி உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT