புதுக்கோட்டை

பொன்னமராவதி ஒன்றியத்தில் திருமயம் எம்எல்ஏ தீவிர பிரசாரம்

23rd Dec 2019 01:28 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி ஒன்றியத்திற்குள்ப்பட்ட 38 கிராமங்களில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து திருமயம் எம்எல்ஏ எஸ். ரகுபதி ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

பொன்னமராவதி ஒன்றியம் சித்தூா், காரையூா், மேலத்தானியம், அம்மன்குறிச்சி, ஆலவயல், கல்லம்பட்டி, கண்டியாநத்தம், பகவாண்டிபட்டி, திருக்களம்பூா், வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, தொட்டியம்பட்டி உள்ளிட்ட 38 கிராமங்களில் உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, திருமயம் சட்டப்பேரவை உறுப்பினா் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். ஒன்றியக்குழு உறுப்பினருக்கு போட்டியிடும் அ.சுதா, அ. அடைக்கலமணி, அ.முத்து, ம.விஜயா, ராதா மற்றும் மாவட்டக்குழு உறுப்பினருக்கு போட்டியிடும் மீனாட்சி, பொன்னழகு மற்றும் உள்ளாட்சியில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்குகள் சேகரித்துப் பேசினாா். தொடா்ந்து முன்னாள் எம்எல்ஏ ராம.சுப்புராம் வாக்குகள்சேகரித்துப் பேசினாா். நகரச் செயலா் அ.அழகப்பன், மாவட்ட துணைச் செயலா் அ.சின்னையா, காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினா் ஏஎல்.ஜீவானந்தம் மற்றும் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT