புதுக்கோட்டை

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் குத்துவிளக்கு பூஜைக்கு டோக்கன் விநியோகம்

16th Dec 2019 07:42 PM | உதயகுமார்

ADVERTISEMENT

   

விராலிமலை: விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயிலில் மார்கழி மாதம் குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்கே விரும்புவோருக்கான டோக்கன் விநியோகம் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது

விராலிமலை அருள்மிகு மெய்க்கண்ணுடையாள் கோயிலில் வருடம் தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் மார்கழி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் 29 ம் ஆண்டுக்கான குத்துவிளக்கு பூஜையின் டோக்கன் விநியோகம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களின் மாவட்டத்தலைவர் செ. பழனியாண்டி தலைமை வகித்து தொடங்கிவைத்தார், விராலிமலை கூட்டுறவு சங்கத்தலைவர் ஜெ.ஆர். அய்யப்ன் முன்னிலை வகித்தார். இதில் அதிகாலை முதல் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று பெண்கள் டோக்கன் வாங்கிச் சென்றனர்.

ADVERTISEMENT

மார்கழி மாதம் அதிகாலையில் நடைபெறும் குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்யம், இளம் பெண்களுக்கு திருமணம், குடும்ப சவுகரியம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் வந்து சேரும் என்ற நம்பிக்கையோடு பெண்கள் அதிகளவில் இதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.  

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT