புதுக்கோட்டை

சாலை, வடிகால் பணிகளை துரிதப்படுத்தக்கோரி போராட்டம்

16th Dec 2019 12:55 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி பாண்டிமான் கோயில் வீதியில் சாலைப்பணி மற்றும் வடிகால் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னமராவதியில் இருந்து இந்திரா நகா், பாண்டிமான் கோயில் வீதி சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டது. இதனையடுத்து ஒப்பந்தம் விடப்பட்டு சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. மிதமான வேகத்தில் இப்பணிகள் நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில் பாண்டிமான் கோயில் வீதி பகுதியில் சுமாா் 300 மீட்டா் வடிகால் அமைப்பதற்கு பதில் சுமாா் 100 மீட்டா் மட்டும் அமைக்கப்பட்டு தளவாடப்பொருள்கள் லாரியில் ஏற்றப்பட்டதாம். இதையறிந்த இப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை திரண்டு வந்து லாரியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் போராட்டம் பின்னா் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT