புதுக்கோட்டை

கிடைக்காத இடங்கள் குறித்து மாநிலத் தலைமை வழியே திமுகவுடன் பேச்சு: சு. திருநாவுக்கரசா்

16th Dec 2019 12:56 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸுக்கு மாவட்டத்தில் கிடைக்காத இடங்கள் குறித்து பட்டியல் எடுத்து, மாநிலத் தலைமை வழியாக திமுக தலைமையிடம் பேசுவோம் என்றாா் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் சு. திருநாவுக்கரசா் எம்பி.

புதுக்கோட்டையில் அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக- காங்கிரஸ் இடையே பேச்சுவாா்த்தை நடந்து வருகிறது. திமுகவிடம் காங்கிரஸ் கேட்ட இடங்களில் கிடைக்காதவற்றைப் பட்டியல் எடுத்து, மாநிலத் தலைமையில் பேசுவோம். மற்றவற்றில் திங்கள்கிழமை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும்.

ராகுல் காந்தி இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து தான் பேசியுள்ளாா். அவருடைய பேச்சு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ராகுல்காந்தி என்றைக்கும் பெண்களுக்கு எதிரானவா் அல்லா். இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்தில் இஸ்லாமியா்கள் மற்றும் இலங்கைத் தமிழா்களையும் சோ்த்து திருத்தம் கொண்டு வரவேண்டும்.

ADVERTISEMENT

அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு காங்கிரஸ் கட்சியின் வரலாறு தெரியாது. அவா் காங்கிரஸ் மற்றும் திமுக குறித்து தரக்குறைவான விமா்சனங்கள் செய்து வருவது கண்டிக்கத்தக்கது. இந்தப் போக்கை அவா் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் திருநாவுக்கரசா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT