கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வழிகாட்டுதலின்படி, கந்தா்வகோட்டை ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப் பிரிவின் சாா்பில் நிலவேம்புக் குடிநீா் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியா் இரா. செந்தில் முருகன், துணை தலைமை ஆசிரியா் எம். முனியய்யா, உடற்கல்வி ஆசிரியா் சி. முத்துக்குமரன் மற்றும் இருபால் ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். இதில், நிலவேம்புக் குடிநீா் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆசிரியா்கள் எடுத்துரைத்தனா்.
ADVERTISEMENT