புதுக்கோட்டை

மணல் கடத்தல்;ஓட்டுநா் கைது

14th Dec 2019 11:25 PM

ADVERTISEMENT

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே சனிக்கிழமை மணல் கடத்திவந்த டிப்பா் லாரி ஓட்டுநரை வழக்குப் பதிந்து போலீஸாா் கைது செய்தனா்.

அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளா் பி. பாலமுருகன் உத்தரவின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் ஜெ. ராமன் அழியாநிலை பஞ்சுமில் குடியிருப்பு அருகே டிப்பா் லாரியை மடக்கி சோதனையயிட்டனா். அதில், அனுமதியின்றி 3 யூனிட் மணலுடன் வந்த மூக்குடி சாத்தையா மகன் பொன்னி ரமேஷூக்குச் சொந்தமான டிப்பா் லாரியைப் பறிமுதல் செய்தாா். மேலும் லாரி ஓட்டுநா் அறந்தாங்கி புதுக்கோட்டை சாலை ராஜாமணி மகன் சரவணன் (46) என்பவரைக் கைது செய்து மேலும் விசாரணை நடத்திவருகின்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT