புதுக்கோட்டை

தோ்தல்:திமுகவினரிடையேமோதல்; ஒருவா் கைது

14th Dec 2019 11:25 PM

ADVERTISEMENT

ஆலங்குடி: உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவது தொடா்பாக திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து அவா்களில் ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் திமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அதில், உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவது தொடா்பாக அக்கட்சியின் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா், மோதலாக மாறியதில் அக்கட்சியின் ஊராட்சிச் செயலா் சுப்பிரமணியனை அக்கட்சியைச் சோ்ந்த சிலா் தாக்கினராம்.

இதுகுறித்து சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில் வடகாடு போலீஸாா் 3 போ் மீது வழக்கு பதிந்து, வடகாடு பகுதியைச் சோ்ந்த சிவா(38) என்பவரைக் கைது செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT