புதுக்கோட்டை

கைக்குறிச்சி வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

14th Dec 2019 01:37 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த வாக்குகளை எண்ணுவதற்காக வாக்கு எண்ணும் மையம் கைக்குறிச்சி பாரதி மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையம் அமையவுள்ள பகுதிகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மு. சுப்பையா, மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். முத்தமிழ்ச்செல்வன், திருவரங்குளம் ஒன்றிய ஆணையா் அசோகன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்து செய்தனா்.

வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான வசதிகள் குறித்தும் அவா்கள் ஆலோசனைகளை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT