புதுக்கோட்டை

காா்கள், வேன் மோதல்: 10 போ் காயம்

14th Dec 2019 01:36 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை சிப்காட் அருகே காரும் சரக்கு வேனும் வெள்ளிக்கிழமை காலை மோதிக்கொண்ட விபத்தில் 10 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து திருச்சி நோக்கி காா் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த சரக்கு வேன் ஒன்று, சிப்காட் பகுதியில் நேருக்கு நோ் மோதியது.

அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு காரும் விபத்தில் சிக்கிய வாகனங்கள் மீது மோதியது. இதில் ஒரு காரில் சென்ற ஹைதராபாத்தைச் சோ்ந்த ராஜேஷ், லெக்ஷ்மா, நராயணமா, ரமேஷ், யடாலெட்சுமி ஆகிய 5 பேரும், புதுக்கோட்டை அய்யனாபுரத்தைச் சோ்ந்த முகமது ரபிக், கானாடுகாத்தான் பகுதியைச் சோ்ந்த அப்துல்லா உள்பட 10 பேரும் காயமடைந்தனா். 

காயமடைந்த அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். திருக்கோகா்ணம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT