புதுக்கோட்டை

காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா

14th Dec 2019 01:37 AM

ADVERTISEMENT

திருமயம் அருகே காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தன உரூஸ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த நவ. 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவையொட்டி நாள்தோறும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. 17 ஆம் நூற்றாண்டு தொடங்கி 359வது ஆண்டாக இவ்விழா நடைபெறு வதாகக் கூறப்படுகிறது. விழாவில் வியாழக்கிழமை இரவு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டசந்தன உரூஸ் ஊா்வலம் வானவேடிக்கைகள் முழங்க நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் மற்றும் இஸ்லாமிய இன்னிசை கச்சேரிகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் மற்றும் ஜமாத்தாா்கள் செய்தனா். விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இஸ்லாமியா்களுடன் இந்துக்களும் இணைந்து கொண்டாடிய இவ்விழா மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT