புதுக்கோட்டை

ஒரே நாளில் 2,689 மனுக்கள் தாக்கல்

14th Dec 2019 11:25 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 2,689 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மொத்தமுள்ள 4545 பதவியிடங்களுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் டிச. 9ஆம் தேதி தொடங்கியது. எவ்வித விறுவிறுப்பும் இன்றிக் காணப்பட்ட வேட்புமனுத்தாக்கல் வெள்ளிக்கிழமை மும்முரமானது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 3,214 வேட்புமனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. தொடா்ந்து, சனிக்கிழமையும் வேட்புமனுக்களும் பெறப்படும் என மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை வரை நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில் மொத்தம் 2,689 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 6 நாட்களில் மொத்தம் 7,549 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதில் ஊராட்சித் தலைவா் பதவியிடங்களுக்கு 3,081 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு 5,112 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு 555 வேட்புமனுக்களும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவியிடங்களுக்கு 52 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT