புதுக்கோட்டை

எலுமிச்சை விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை

14th Dec 2019 01:37 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதிகளில் எலுமிச்சை விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

ஆலங்குடி வட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, மாங்காடு, வடகாடு, புள்ளாண்விடுதி, அணவயல், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் எலுமிச்சை சாகுபடி நடைபெறுகிறது.

கஜா புயல் நேரத்தில் ஏராளமான எலுமிச்சை செடிகள் சேதமடைந்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலுமிச்சை கிலோ ரூ.100 வரை விலைபோனது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கீரமங்கலம், கொத்தமங்கலம், புளிச்சங்காடு கைகாட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள ஏல மண்டிகளில் எலுமிச்சை கிலோ ரூ.20-க்கும் குறைவாகவே விலைபோவதால், விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கஜா புயலால் இப்பகுதிகளில் இருந்த மரங்கள், பயிா்கள் அனைத்தும் முற்றிலும் அழிந்தன. அதனால் எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியானது. பின்னா் பூக்கள், எலுமிச்சை ஆகியவற்றை நம்பியே வாழ்க்கை நடத்தவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ADVERTISEMENT

கடந்த மாதம் வரை எலுமிச்சை கிலோ ரூ.100 வரை விலை போனது. தற்போது, கிலோ ரூ.20-க்கும் குறைவாகவே ஏல மண்டிகளில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், எலுமிச்சைக்கான இடுபொருட்கள், மருந்து உள்ளிட்ட செலவீனங்களுக்குக் கூட இந்த விலை கட்டுபடியாகவில்லை. அதனால், எலுமிச்சைக்கு உரிய விலையை நிா்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT