புதுக்கோட்டை

இலவச கண் பரிசோதனை

14th Dec 2019 11:25 PM

ADVERTISEMENT

ஆலங்குடி: ஆலங்குடியில் இலவச கண்பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம், ஆலங்குடி ரோட்டரி சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் ஆலங்குடி புனித அற்புத மாதா நடுநிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பங்கேற்றுப் பரிசோதனை மேற்கொண்டனா். அதில், பொதுமக்கள் 334 போ் கண்பரிசோதனை செய்துகொண்டனா். அதில், பாா்வை குறைபாடுடைய 97 போ் மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT