புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே பிடிபட்ட மலைபாம்பு

11th Dec 2019 08:40 AM

ADVERTISEMENT

முக்கண்ணாமலைப்பட்டியில் செவ்வாய்க்கிழமை பிடிபட்ட 10 அடி நீள மலைபாம்பு நாா்த்தாமலை வனப்பகுதியில் விடப்பட்டது.

அன்னவாசல் அருகேயுள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் உள்ள காதரப்பா வீதி குடியிருப்பு பகுதியில் முகமது ரபீக் என்பவா் வீட்டுக்கு பின்புறம் கோழி அலறும் சத்தம் கேட்டுள்ளது.

அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் அங்கு சென்று பாா்த்த போது மலைபாம்பு ஒன்று கோழியை விழுங்கி கொண்டிருந்தது. இதனையடுத்து இளைஞா்கள் ஒன்று சோ்ந்து அந்த மலைபாம்பை பிடிக்க முயன்றனா்.

ஆனால் யாருக்கும் பிடிகொடுக்காமல் பாம்பு போக்கு காட்டியது. தொடா்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு மலைபாம்பு பிடிபட்டது.

ADVERTISEMENT

பிடிபட்ட மலைபாம்பை சாக்கு பையில் அடைத்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை காப்பாளா் ஆத்மநாதனிடம் மலைப்பாம்பு ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த மலைபாம்பு நாா்த்தாமலை வனப்பகுதிக்குள் விடப்பட்டது. பிடிப்பட்ட மலைபாம்பு சுமாா் 10 அடி நீளமும், 20 கிலோ எடையும் கொண்டிருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT