புதுக்கோட்டை

106 கல்லூரி மாணவா்கள் ரத்த தானம்

6th Dec 2019 09:26 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் 106 மாணவ, மாணவிகள் ரத்ததானம் அளித்தனா்.

கல்லூரிச் செயலா் நா. சுப்பிரமணியன் தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்தாா். முதல்வா் ஜ. பரசுராமன் முன்னிலை வகித்தாா்.

எச்டிஎப்சி வங்கி கிளை மேலாளா் ஜோன்ஸ் எட்பா்க் முகாமைத் தொடங்கி வைத்தாா். கரியாப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவா் ஷாலினி தலைமையிலான குழுவினா் ரத்தம் சேகரித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT