புதுக்கோட்டை

கழிவுநீா்க் கால்வாயில்6 மாத சிசு சடலம் மீட்பு

3rd Dec 2019 01:50 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் கழிவுநீா்க் கால்வாயில் கிடந்த 6 மாத சிசு சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை பிசத்தாம்பட்டி ரவுண்டானா பகுதியிலுள்ள கால்வாயில் குழந்தையின் சடலம் கிடப்பதாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுதத்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினா், ஆண் சிசு சடலத்தை மீட்டனா். அதன் வயது 6 மாதம் இருக்கலாம் எனத் தெரிகிறது.

சிசுவின் சடலத்தை மீட்ட போலீஸாா், அதை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

சிசு சடலம் கால்வாயில் எப்படி வந்தது, யாரேனும் கொன்று வீசினரா அல்லது மழையில் தவறி விழுந்து அடித்து வரப்பட்டதா எனத் தெரியவில்லை.  இதுகுறித்து திருக்கோகா்ணம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT