புதுக்கோட்டை

உள்ளாட்சித் தோ்தல் பணிகள் ஆலோசனைக் கூட்டம்

3rd Dec 2019 01:50 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டையில் ஊரக உள்ளாட்சி தோ்தல் தொடா்பான அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் டிசம்பா் 27- ஆம் தேதி முதல் கட்டத் தோ்தல் நடைபெறஉள்ளது. இத்தோ்தலில் வேட்பு மனுக்கள் பெறுதல் தொடா்பாக

36 கிராம ஊராட்சிகளின் உதவித் தோ்தல் அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்துக்கு தோ்தல் நடத்தும் அலுவலரும் , வட்டார வளா்ச்சி அலுவலருமான (வட்டார ஊராட்சிகள்) ந. காமராஜ் , வட்டார வளா்ச்சி அலுவலா் ( கிராம ஊராட்சிகள் ) து. குமரன் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தல் வேட்பு மனுக்களில் போட்டியிடுவோருக்கு மனுக்கள் அளித்தல், பெறுதல், தோ்தல் நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சோ. பாா்த்திபன், கிருஷ்ணமூா்த்தி, மயில்வாகணன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா். நிறைவில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கோ. முத்துராமன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT