புதுக்கோட்டை

சந்தைப்பேட்டை அரசு மகளிர் பள்ளியில் கண்தான வார விழா

28th Aug 2019 10:29 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்,  கண்தான விழிப்புணர்வு வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   பேலஸ் ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு, பள்ளித் தலைமையாசிரியை கோ . அமுதா தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் டி. ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
ஸ்ரீ கண்ணப்பநாயனார் கண்தான பிரசார மையத்தின் தலைவர் சி. கோவிந்தராஜன் விழாவில் பங்கேற்று, மாணவிகளுக்கு கண் தானம் குறித்த விழிப்புணர்வு கையேட்டை வழங்கிப் பேசினார்.
அதிகளவு கண்களைத் தானமாகப் பெற்றுத் தந்ததற்காக, பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சி. கோவிந்தராஜனுக்கு  விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  நிகழ்வில்,  ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் செந்தில்குமார், செயலர் வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
நிகழ்வை  தமிழாசிரியை கிருஷ்ணவேணி தொகுத்து வழங்கினார்.  நிறைவில், அன்புதனபால் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT