புதுக்கோட்டை

காட்டுநாவல் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்

28th Aug 2019 10:33 AM

ADVERTISEMENT

கந்தர்வகோட்டை ஒன்றியம், காட்டுநாவல் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு புதுக்கோட்டை  கலால் உதவி ஆணையர் எம். கார்த்திகேயன்  தலைமை வகித்து,  வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், புதிய சுகாதார வளாகம் அமைத்துத் தரக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 47 மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா கோரியவர்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.  மற்ற மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி, விசாரணையின் அடிப்படையில் தீர்வு காணவும் உத்தரவிடப்பட்டது. கந்தர்வகோட்டை  வட்டாட்சியர் கோ. கலைமணி, ஒன்றியக் குழு  முன்னாள் தலைவர் பி.சின்னப்பா, மண்டலத் துணை வட்டாட்சியர் செல்வகணபதி  முன்னிலை வகித்தனர். 
சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் சீனிவாசன், சரக வருவாய் ஆய்வாளர் மாரியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் அரங்க.வீரபாண்டியன், தமிழரசன் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர். கிராமநிர்வாக அலுவலர் சிவசக்தி ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT