அறந்தாங்கி அருகிலுள்ள ஆவணத்தான்கோட்டை மேற்கு நடுநிலைப்பள்ளியில் சட்ட அறிவு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஆணைக்குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான எம். அமிர்தவேலு தலைமை வகித்தார். அவர், இலவச சட்ட உதவி மற்றும் சட்டம் சார்ந்த உதவிகள் குறித்து பொதுமக்கள், மாணவர்களுக்கு எடுத்துரைத்துப் பேசினார். பள்ளித் தலைமையாசியை கலைச்செல்வி, வழக்குரைஞர்கள் பி.லோகநாதன், கே.எம்.எஸ்.செந்தில்குமார், அருண்ராஜ், பழனியப்பன், உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார். நிறைவில் இளநிலை நிர்வாக உதவியாளர் வி.தேவி நன்றி கூறினார்.