முறையாக வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு நகராட்சி அலுவலர்கள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தனர்.
புதுக்கோட்டை நகராட்சிக்குச் சொந்தமான பல கடைகளில் மாதந்தோறும் முறையாக வாடகை செலுத்தப்படவில்லை எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து நகராட்சி வருவாய் அலுவலர் காந்தி தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள் சீனிவாசன், நைனா முகமது, கணேசன், திருமலைக்குமார், பாண்டியன் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினர் கடந்த சில நாட்களாக வாடகை வசூலில் ஈடுபட்டு வந்தனர். சந்தைப்பேட்டை பகுதியில் தொடர்ந்து அறிவுறுத்தியும் வாடகையைச் செலுத்தாத 5 கடைகளுக்கு திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தனர்.