ஊராட்சி ஒன்றியங்களில் விழிப்புணர்வுப் பதாகை எழுதும் பணிகளில் ஓவியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஓவியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திலகர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ஆர். சுப்பு தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்புக் குழுச் செயலர் பா. ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் சி. இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டச் செயலர் எம். ஆறுமுகம் கோரிக்கையை விளக்கிப் பேசினார். அரசு விழிப்புணர்வு பதாகைகள் எழுதும்பணியில் ஓவியர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.