பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் அன்னை தெரசாவின் 110 ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திக்கற்ற குழந்தைகள், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், கல்வி மறுக்கப்பட்டோர் ஆகியோரின் நம்பிக்கை நட்த்திரமாகத் திகழ்ந்த அன்னை தெரசாவின் பிறந்தநாள் விழாவிற்கு பள்ளியின் முதல்வர்ச.ம.மரியபுஷ்பம் தலைமை வகித்தார்.
பள்ளி வளாகத்தில் அவரது திருவுருவப் படம் வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அன்னை தெரசா நலிந்தோர்க்கு ஆற்றிய தொண்டுகளை ஆசிரியர் ஆர்.பிரின்ஸ் விளக்கிப் பேசினார்.
பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.