புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே விற்பனைக்காக குவித்து வைத்திருந்த 11 யூனிட் ஆற்று மணலை அறந்தாங்கி வட்டாட்சியர் பா.சூரியபிரபு பறிமுதல் செய்து குடிமராமத்து பணிகளுக்கு அனுப்பிவைத்தார்.
அறந்தாங்கி அருகே கோங்குடி கிராமத்தில் வெள்ளாற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் கடத்திவரப்பட்டு பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக அறந்தாங்கி வட்டாட்சியர் பா.சூரியபிரபுவிற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டதில், விற்பனைக்கு தயார்நிலையில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 11 யூனிட் மணலைக் கைப்பற்றி அறந்தாங்கி ஒன்றியம், வேம்பங்குடியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளுக்கு அனுப்பிவைத்தார்.