புதுக்கோட்டை

1,000 பனை விதைகள் நடவு

23rd Aug 2019 10:04 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடியில் நீர்நிலைகளின் கரைகளைப் பலப்படுத்தும் வகையில் 1000 பனைவிதைகளை நடவு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி வட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு உள்ளிட்ட பகுதி இளைஞர்கள் இணைந்து நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சேந்தன்குடியில் உள்ள சன்னாசி, ஆவுடனி குளக்கரைகளைப் பலப்படுத்தும் விதமாக அப்பகுதி இளைஞர்கள் பனை விதைகளை நடத் திட்டமிட்டு, 1000 பனை விதைகளைச் சேகரித்தனர். அவற்றை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களை கொண்டு நடவு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT