புதுக்கோட்டை

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மதிப்பீட்டு முகாம்

23rd Aug 2019 10:01 AM

ADVERTISEMENT

விராலிமலையில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மதிப்பீட்டு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைந்த கல்வித் துறை சார்பில் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை மாவட்டக் கல்வி அலுவலர் எஸ். ராஜேந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார்.
மருத்துவர்கள் ஜான்விஸ்வநாதன், சரவணன், கார்த்திக், வெங்கடேஷ், தெய்வநாயகம் ஆகியோர் முகாமில் பங்கேற்ற 21 மாற்றுத் திறன் 200 மாணவர்களை பரிசோதித்து சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
மேலும் உதவி சாதனங்கள், உதவித் தொகை தேவைப்படுவோருக்கு பரிந்துரை வழங்கப்பட்டது. பள்ளி துணை ஆய்வாளர் கி. வேலுச்சாமி, புள்ளியல் ஆய்வாளர் பத்மநாபன் முடநீக்கியல் வல்லுநர்கள், சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.
உதவித் திட்ட அலுவலர் ரவிசந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ். ஜெகன்முருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், வட்டார கல்வி அலுவலர் துரையரசன் ஆகியோர் பேசினர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ச. புவனேஸ்வரி (பொ) வரவேற்றார். சிறப்பாசிரியர் எல். ராஜேஷ்கண்ணா நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT