புதுக்கோட்டை

புத்தகக் கண்காட்சி தொடக்கம்

23rd Aug 2019 10:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியிலுள்ள மீனாட்சி மஹாலில் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. வரும் செப். 8 வரை நடைபெறும் கண்காட்சியில் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவிகித தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சியை புதுக்கோட்டை வாசகர் பேரவையின் செயலர் சா. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் டி. ரவிச்சந்திரன், செயலர் வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தொடர்ந்து 15 ஆண்டுகளாக புதுக்கோட்டையில் இந்தப் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தின் பல்வேறு முன்னணி பதிப்பகங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT