புதுக்கோட்டை

நாளை இலவச கண் சிகிச்சை முகாம்

23rd Aug 2019 10:03 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை ஆதிகாலத்து அலங்கார மாளிகை, புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், மகாராணி ரோட்டரி சங்கம், மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் வரும் சனிக்கிழமை (ஆக. 24) காலை 9 மணிக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை ஆதிகாலத்து அலங்கார மாளிகையின் கீழ்தளத்தில் நடைபெறவுள்ள முகாமில், பொதுமக்களுக்கு அனைத்து வகையான கண் பரிசோதனைகளும் அதற்கான சிகிச்சைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளன.
அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு இலவச அறுவைச் சிகிச்சை அளிக்கப்படும். மேலும் ஒரு மாதத்துக்குப் பிறகு தேவைப்படும் தொடர் பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்படும். ஏற்பாடுகளை ஆதிகாலத்து அலங்கார மாளிகையின் நிர்வாக இயக்குநர் மணிகண்டன், இணை நிர்வாக இயக்குநர்கள் அருண், இளையராஜா உள்ளிட்டோரும் செய்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT