புதுக்கோட்டை

சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

23rd Aug 2019 10:03 AM

ADVERTISEMENT

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தர்ம தங்கவேல், ராயல் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், மாநிலப் பொதுச் செயலர் சந்திரசேகரன், நகரத் தலைவர் இப்ராஹிம் பாபு, பொதுக்குழு உறுப்பினர் ஜிஎஸ். தனபதி, வட்டாரத் தலைவர்கள் கீரனூர் பழனியப்பன், மகாதேவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சிபிஐயின் நடவடிக்கையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
50 பேர் கைது: ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென நகர காங்கிரஸ் தலைவர் இப்ராஹிம் பாபு உள்ளிட்ட சிலர் சிபிஐ போலீஸாரின் உயர் அலுவலர் படத்தை கையில் எடுத்துக் கொண்டு அதை காலணியால் அடித்தனர்.
பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் சுற்றிவளைத்து அப்படத்தைப் பிடுங்கினர். இதைத் தொடர்ந்து அனுமதியின்றி திடீர் போராட்டம் நடத்தியதாக காங்கிரஸார் 50 பேரைக் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT