கந்தர்வகோட்டை அருகேயுள்ள வண்ணாரப்பட்டி ஸ்ரீஆலடிப்பெத்த முனியன் கோயிலில் கிடாவெட்டு பூஜை நடைபெற்றது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கிடாவெட்டு பூஜை நடைபெறும். இதேபோல் நிகழாண்டு கிடாவெட்டு பூஜை வெள்ளிகிழமை இரவு நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு ஆபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்று, சாமி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அதிகாலையில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 250க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு சனிக்கிழமை பிற்பகலில் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது.