பொன்னமராவதி அருகேயுள்ள மேமணப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு பொன்னமராவதி ஷைன் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ஜா.கிளாராமேரி தலைமை வகித்தார். விழாவில் பொன்னமராவதி ஷைன் அரிமா சங்கத்தலைவர் ச.சோலையப்பன் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவியருக்கு இருக்கைகள், பாடக்குறிப்பேடுகள், எழுதுபொருள்கள் ஆகியவற்றை வழங்கினார். மேலும் மேமணப்பட்டி சோலை செல்வம் தம்பதியினர் சார்பில் பள்ளிக்கு சுமார் 15 ஆயிரம் மதிப்புள்ள மேஜை வழங்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அரிமா சங்க நிர்வாகிகள் ராஜா, சக்திவேல், உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், கிராம கல்விக்குழுநிர்வாகிகள் பங்கேற்றனர். ஆசிரியர் மாடசாமி நன்றி கூறினார்.