புதுக்கோட்டை

ஆலங்குடி புனித மாதா தேர்பவனி திருவிழா

18th Aug 2019 04:43 AM

ADVERTISEMENT


ஆலங்குடியில் உள்ள புனித அதிசய மாதா தேவாலயத்தில் தேர்பவனி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருவிழாவையொட்டி, தேவாலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாதாவை எழுந்தருளச்செய்து, ஆலங்குடி நகர் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, பாடல் பாடியவாறு ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாலயத்தை அடைந்தனர். தொடர்ந்து, சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT