புதுக்கோட்டை

விபத்தில் முதியவர் படுகாயம்

16th Aug 2019 08:59 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே சாலை விபத்தில் முதியவர் படுகாயமடைந்தார்.
பொன்னமராவதி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தை சார்ந்தவர் ராமையா(58). விவசாயியான இவர் வியாழக்கிழமை புதுக்கோட்டை- பொன்னமராவதி சாலையில் நெய்வேலிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது நல்லூர் அருகே தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமுற்ற ராமையா, தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT