புதுக்கோட்டை

புதுகை நகரில் ஆகஸ்ட் 17 மின்தடை

16th Aug 2019 08:58 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை நகர துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஆக. 17) நடைபெற உள்ளது. 
எனவே இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் நகரப் பகுதிகளான சாந்தநாதபுரம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சார்லஸ் நகர், கீழ ராஜவீதி, நிஜாம் காலனி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக் நகர், கலீப் நகர், மருப்பணி ரோடு, திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள்புரம், அடப்பன் வயல், காமராஜ புரம், போஸ் நகர், கணேஷ் நகர் ஆகிய இடங்களில் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சையது அகமது இஸ்மாயில் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT