புதுக்கோட்டை

மாவயல் காட்டு அய்யனார் கோயில் தேரோட்டம்

11th Aug 2019 04:44 AM

ADVERTISEMENT


பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனார் கோயில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆக.2 ஆம் தேதி காப்புக்கட்டப்பட்டு ஆடித்திருவிழா தொடங்கியது. தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி வீதி உலா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்கு பின் மாவயல் காட்டு அய்யனார் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். தேர் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து தேரடியில் நிறைவுற்றது. விழாவில் கீழத்தானியம், காரையூர் மற்றும் சுற்றுக்கிராம மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். இலுப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சிகாமணி தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT