புதுக்கோட்டை

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

11th Aug 2019 04:42 AM

ADVERTISEMENT


கந்தர்வகோட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமிற்கு மாவட்ட கல்வி அலுவலர் ராகவன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் அலெக்ஸாண்டர், வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுரேஷ் வரவேற்றார். முகாமில், கலந்துகொண்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை மருத்துவர்கள், முடம்நீக்கியல் நிபுணர்கள் பரிசோதித்தனர். முகாமில், கந்தர்வகோட்டை சுற்று வட்டார பகுதி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT