புதுக்கோட்டை

பொன்னமராவதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

11th Aug 2019 04:43 AM

ADVERTISEMENT


புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி  ஆரம்பசுகாதார நிலையம் சார்பில், வட்டார வள மையத்தில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த முகாம் நடத்தப்பட்டது. முகாமுக்கு  வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.செல்வக்குமார் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் முகாமில் பங்கேற்று டெங்கு காய்ச்சல் பரவும் விதம், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். முகாமில் கொசுப்புழுக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.  வட்டார வள மையத்திற்குள்பட்ட  72 ஆசிரியர்கள் முகாமில் பங்கேற்றனர். மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வீடுகள் தோறும் ஏடிஎஸ் கொசுப்புழுக்கள் கண்டறிந்து அழித்தல்,கொசு மருந்து அடித்தல் மற்றும் தூய்மைப்பணிகள் நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர் நா.உத்தமன் டெங்கு காய்ச்சல், தொற்றும், தொற்றா நோய்கள், ரேபிஸ் நோய் குறித்தும் விளக்கினார். 13 களப்பணியாளர்கள் முகாமில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT