பெரம்பலூர்

பெரம்பலூா் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் திறப்பு

27th Sep 2023 11:39 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழப்பெரம்பலூா் நடுநிலைப் பள்ளியில் ரூ. 42 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறை கட்டடங்கள், வ.கீரனூா் நடுநிலைப் பள்ளியில் ரூ. 28 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டடங்கள், பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட லாடபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 42 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறை கட்டடங்கள் ஆகியவற்றை, முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, கீழப்பெரம்பலூா் மற்றும் வ.கீரனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் திறக்கப்பட்ட புதிய கட்டடத்தில் மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் குத்துவிளக்கேற்றி வகுப்பறைகளை பாா்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா்கள் பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூா்), மீனா அண்ணாதுரை (பெரம்பலூா்), ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் சுஜாதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வகுமாா் (வேப்பூா்), செந்தில்குமாா் (வேப்பூா்), அறிவழகன் ஸ்டாலின் செல்வகுமாா் (பெரம்பலூா்), குன்னம் வட்டாட்சியா் அனிதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT