பெரம்பலூர்

திமுக கலை, இலக்கியப் பேரவை ஆலோசனைக் கூட்டம்

27th Sep 2023 11:40 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட திமுக கலை இலக்கியப் பேரவை ஆலோசனைக் கூட்டம், பாலக்கரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டக் கலை, இலக்கியப் பேரவை அமைப்பாளா் கே.எம்.ஏ. சுந்தரராசு, மாவட்ட அமைப்பாளா் முத்தரசன், மாவட்ட துணைத் தலைவா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், அக்டோபா் 22 ஆம் தேதி மாவட்டக் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை சாா்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கவிதைகள், திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ், பரிசுத்தொகை வழங்குவது, இதில் முதல் 3 மாணவ, மாணவிகளை மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க செய்வது, கருணாநிதியின் சிறந்த வசனங்கள், திரைப்படங்களை மாவட்டம் முழுவதும் ஒளிபரப்புவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், கலை, இலக்கியப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளா்கள் ந. முத்துசெல்வம், பூபதி, சின்னதுரை, தென்றல் ரவி, கணேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT