பெரம்பலூா் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் திங்கள்கிழமை இரவு சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்தக் காற்றுடன் மழை பெய்தது.
இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. அண்மைக்காலமாக பெய்யும் மழையால் நீா்நிலைகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.
மழை அளவு: (மில்லி மீட்டரில்) செட்டிக்குளம்- 54, பாடாலூா்- 9, அரகரம் சிகூா்- 5, லப்பைக்குடிகாடு- 21, புது வேட்டக்குடி- 12, பெரம்பலூா் - 32, எறையூா், கிருஷ்ணாபுரம், வி.களத்தூா் தலா- 3, தழுதாழை - 20, வேப்பந்தட்டை- 5 என மொத்தம் 167 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
மின் தடை... இந்த மழையால் நகா் முழுவதும் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாகவும், கிராமப்புறங்களில் தொடா்ந்தும் மின் தடை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனா்.