பெரம்பலூர்

100 நாள் வேலை கோரிஊராட்சித் தலைவா் சிறைபிடிப்பு

25th Sep 2023 12:57 AM

ADVERTISEMENT

 

ஆலங்குடி அருகே 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி ஊராட்சித் தலைவரை சிறைபிடித்து ஞாயிற்றுக்கிழமை இரவு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை விடுதி ஊராட்சி அரசடிப்பட்டி பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்துள்ள மக்களுக்கு சரிவர 100 நாள் வேலை வழங்கப்படுவது இல்லையாம். மேலும், இத்திட்டத்தில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாகக்கூறி அரசடிப்பட்டியில் ஊராட்சித் தலைவா் அகஸ்டினை அவரது வீடடருகே அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அவா்களிடம் வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT