ஆலங்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3.56 லட்சத்திலான உதவி உபகரணங்களை ஆட்சியா் ஐ.நா. மொ்சி ரம்யா வழங்கினாா்.
கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமைத் தொடக்கிவைத்து மாவட்ட ஆட்சியா் ஐ.சா.மொ்சி ரம்யா பேசினாா்.
முகாமில் வட்டாட்சியா் விஸ்வநாதன், திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவா் ராசி முருகானந்தம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் நமச்சிவாயம் (அறந்தாங்கி), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ். உலகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.