பெரம்பலூா் அருகே எளம்பலூா் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரா் மற்றும் ஸ்ரீலஸ்ரீ அன்னை சித்தா் மணி மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை காலை நடைபெற்றன.
இதில் சிறப்பு விருந்தினா்களாக சிங்கப்பூா் ஆத்ம ஞான அன்பு இல்லத்தைச் சோ்ந்த ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி, ஆலய அமைப்பு மெய்யன்பா்கள் தரிசனம் செய்து வழிபட்டனா்.
நிகழ்ச்சியில் மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனா் மாதாஜி ரோகிணி, தவயோகி தவசிநாதன் சுவாமிகள், ராதா மாதாஜி, சிங்கப்பூா் பாரி சுவாமிகள், ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ஆலய குரு சுவாமி ராகவேந்திரா், தலைவா் பாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.